×

பேரப்பிள்ளைகள் முன்னிலையில் 52, 55 வயது சகோதரர்களுக்கு காதணி விழா

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மருதவல்லிபாளையம் அடுத்த ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் முனிவேல்(55), இவரது தம்பி ராஜா(52). இவர்களுக்கு 3 சகோதரிகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக முனிவேலுக்கும், ராஜாவுக்கும் சிறுவயதில் காது குத்தவில்லையாம். அவர்களுக்கு காது குத்த வேண்டும் என்பது நீண்டநாள் வேண்டுதல் என அவர்களின் தாய், குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதே ஊரில் உள்ள குலதெய்வமான கன்னியம்மன் கோயிலில் முனிவேல், ராஜா ஆகியோருக்கு அவர்களுடன் பிறந்த 3 சகோதரிகள் மற்றும் முனிவேலின் மகன், மகள், பேரப்பிள்ளைகள், ராஜாவின் மகன்கள், உறவினர்கள், கிராம மக்கள் முன்னிலையில் இருவருக்கும் காதணி விழா நடந்தது.பின்னர் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்களுக்கு விருந்து பறிமாறப்பட்டது.த்தாக்களின் முன்னிலையில் பேரன்கள் காது குத்திக்கொள்ளும் காலத்தில் பேரப்பிள்ளைகள் முன்னிலையில் தாத்தாக்கள் காது குத்திக்கொண்டதாக அப்பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.

The post பேரப்பிள்ளைகள் முன்னிலையில் 52, 55 வயது சகோதரர்களுக்கு காதணி விழா appeared first on Dinakaran.

Tags : Vellore ,Munivel ,Raja ,Thaluka Marudavallypalayam ,
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!